மகாமகம் கொள்ளை விழாவே!
மதத்தின்பேரால் மக்கள் மடமையில் ஆழ்த்தப்படுவதுடன் அறிவை மட்டுமின்றி மக்கள் செல்வத்தையும் கொள்ளை கொள்ளையாக இழக்கச் செய்யும் பணிகளே தொடர்ந்து நடந்து வருவதற்கான இந்நாட்டு மக்கள் காட்டுமிராண்டித்தனத்திலிருந்து எப்போதுதான் மீண்டு ஏனைய நாட்டவர்களைப்போல் முன்னேற்றம் அடையப் போகிறார்களோ என்று ஏங்க வேண்டியுள்ளது . மனிதக் கற்பனையான கடவுள் எண்ணமும் அதற்கான கோவில்களும் சிலைகளும் எழுப்பி உற்சவங்கள் , விழாக்கள் நடத்துதல் போன்ற அறிவும் பணமும் கொள்ளை போகும் சம்பவங்களே நமது நாட்டில் பெருகி வருகின்றன . மனிதன் தான் செய்த பாவங்களைத் தொலைக்க கடவுளை நாடினான் ! அதேசமயம் , எல்லாம் கடவுள் செயல் , அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று ஒருபக்கம் கூறிக்கொண்டே பலவித பாவங்கள் புரிவதிலும் ஈடுபடுகிறான் . பாவம் செய்தால் அதற்கேற்ற தண்டனை அனுபவிப்பு நிச்சயம் கிடைக்கும் என்று இருந்தால்தானே மேலும் அப்பாவ காரியங்களை செய்யாமல் இருக்கவும் பாவ காரியங்களை எண்ணாமல் இருக்கவும் முடியும் அப்படிக்கின்றி கடவுள் கருணையால் ( பாவம் செய்யக் கா...